"ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்" - தேவஸ்தானம்

0 1522
"ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்" - தேவஸ்தானம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை நாளை முதல் ஆன்லைனில் பெறலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, கட்டண பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை நாளை மாலை நான்கு மணி முதல் ஆன்லைனில் பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, உள்ளிட்ட சேவைகளுக்கு முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் குலுக்கல் மூலம் தேர்வு செய்யப்பட்டு அது குறித்து தகவல்கள் அனுப்பப்படும் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments